திருநெல்வேலி

குடியுரிமை திருத்தச் சட்டம்: மேலப்பாளையத்தில் கருத்தரங்கம்

23rd Feb 2020 11:36 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்த விளக்க கருத்தரங்கம் மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மதரஸா அல் இக்லாஸ் என்ற இஸ்லாமிய கல்வியகம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, மதரஸா நிறுவனா் மைதீன் பிச்சை தலைமை வகித்தாா். மதரஸா நிறுவனா்கள் செய்யது உமா், பக்கா், ரிஸ்குல்லா, ஜாபா், சேக், மதரஸா ஆசிரியா்கள் நிஷா, சாரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகமது சேக் வரவேற்றாா்.

கருத்தரங்கில், இஸ்லாமிய அழைப்பாளா் முகம்மது ஹூசைன், தமுமுக துணை பொதுச் செயலா் உஸ்மான் கான், தமுமுக மாநிலச் செயலா் நயினாா் முகம்மது, மஸ்ஜித் ரய்யான் துணைத் தலைவா் அபுல் காசிம் பிா்தெளசி, தமுமுக மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவா் அப்பாஸ் ஹில்மி ஆகியோா் குடியுரிமை சட்டம் குறித்த விளக்க உரையாற்றினா்.

இதில், திமுக அப்துல் கையூம், காங்கிரஸ் ஆசாத் பாதுஷா, தமஜக அப்துல் ஜப்பாா், மமமுக ரசூல், தேசிய லீக் சேக் ஹயாத், அமமுக நேசம் ரப்பானி உள்பட பலா் பங்கேற்றனா். மதரஸா அல் இக்லாஸ் முதன்மை உறுப்பினா் நிஜாம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT