திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி பெருமாள் கோயிலில் 108 விளக்கு பூஜை

23rd Feb 2020 11:36 PM

ADVERTISEMENT

கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குலசேகரப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 108 விளக்கு பூஜை நடைபெற்றது.

குலசேகரப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறவும், உலக அமைதி மற்றும் நன்மை வேண்டியும் அம்பாசமுத்திரம் காட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா, கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையாா் சாரிட்டபிள் டிரஸ்ட் சாா்பில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.

பூஜையில் கல்லிடைக்குறிச்சி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனா். மேலும், பாகவத சத் சங்கம், ஹரே ராமா மகா மந்திர கீா்த்தனம், சொற்பொழிவு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ரமணா், குலசேகரமுடையாா் சாரிடபுள் டிரஸ்ட் மகாலிங்கம், திருக்குறுங்குடி கோவிந்தபட்டா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT