திருநெல்வேலி

வாடகை பாக்கி: அம்பாசமுத்திரத்தில் 6 கடைகளுக்கு சீல்

22nd Feb 2020 06:36 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாத 6 கடைகளுக்கு நகராட்சி பணியாளா்கள் சீல் வைத்தனா்.

அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிா்வாகத்துக்குச் சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றில் பல கடைகளுக்கு நீண்ட நாள்களாக வாடகை செலுத்தவில்லையாம்.

அவா்களுக்கு உரிய அவகாசம் வழங்கியும் வாடகை செலுத்தாததையடுத்து, வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையா் ஜின்னா, சுகாதார ஆய்வாளா் சிதம்பரம் ராமலிங்கம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைமை எழுத்தா் கணேசன் உள்ளிட்டோா் போலீஸாா் பாதுகாப்புடன் சென்று அங்குள்ள 6 கடைகளுக்கு சீல் வைத்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT