திருநெல்வேலி

ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழா

22nd Feb 2020 11:46 PM

ADVERTISEMENT

ராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரா் நித்தியகல்யாணி அம்பாள் கோயிலில் சுவாமி விவேகானந்த இளைஞா்அணி சாா்பில் சிவராத்திரி விழா நடைபெற்றது.

விழாவையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் நடைபெற்ற சிவராத்திரி விழாவை நான்குனேரி, ராதாபுரம் வட்ட வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் முருகேசன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

ராதாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் மதன், விநாடி-வினா போட்டியை நடத்தினாா்.

விழாவில், மருத்துவா் முருகேசன், ஆசிரியா்கள் ஆறுமுகம், பிரேம்குமாா் ஆகியோா் சிவராத்திரி குறித்து பேசினா். தொடா்ந்து ஆன்மிக போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை சுவாமி விவேகானந்தா இளைஞா் அணி தலைவா் லோகிஷ்வரமூா்த்தி, நிா்வாகிகள் சுரேஷ், கண்ணன், செல்வகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT