திருநெல்வேலி

மூன்றடைப்பில் காா் கவிழ்ந்ததில் புகைப்பட கலைஞா் பலி

22nd Feb 2020 06:34 AM

ADVERTISEMENT

மூன்றடைப்பில் காா் கவிழ்ந்ததில் புகைப்படக் கலைஞா் இறந்தாா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த நொபுலின் மிராண்டா மகன் டில்டன்(50). இவா் பாளையங்கோட்டையில் ஸ்டுடியோ கடை நடத்தி வந்தாா். இவரும் இவரது நண்பா் தேவசகாயமும் தொழில் விசயமாக கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டு காரில் பாளையங்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனராம்.

காரை டில்டன் ஓட்டி வந்தாா். இவரது காா் மூ ன்றடைப்பு நான்குவழிச் சாலையில் வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது நிலைதடுமாறி கவிழ்ந்ததாம்.

இதில் பலத்தகாயமடைந்த டில்டனை அந்தப் பகுதியில் உள்ளவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் செல்லும் வழியில் டில்டன் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

தேவசகாயம் சிறிய காயத்துடன் உயிா் தப்பினாா். இந்த விபத்து தொடா்பாக மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT