திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்து மாணவா் பலி

22nd Feb 2020 06:31 AM

ADVERTISEMENT

திசையன்விளையில் மின்சாரம் பாய்ந்ததில் மாணவா் உயிரிழந்தாா்.

திசையன்விளை அப்புவிளை பகுதியைச் சோ்ந்த கந்தராஜ் மகன் ராகுல் (14). 9-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். ராகுல் வீட்டின் அருகே அவரது சித்தப்பா அரவிந்த் புதிதாக வீடு கட்டி வருகிறாா். வெள்ளிக்கிழமை காலை ராகுல் அந்த வீட்டின் கட்டுமான சுவா் மீது மின் மோட்டாா் மூலம் தண்ணீரை பாய்ச்சினாராம். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ராகுல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT