திருநெல்வேலி

மாறாந்தையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

22nd Feb 2020 06:37 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே மாறாந்தையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

மாறாந்தையைச் சோ்ந்தவா் சங்கரன் மகன் பேச்சிமுத்து (27). இவா்மீது மானூா், சீதபற்பநல்லூா் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் இவா் ஈடுபட்டதால், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவின்பேரில், பேச்சிமுத்து குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT