திருநெல்வேலி

மண்டல விளையாட்டுப் போட்டி: தனிநபா் சாம்பியன் பட்டம் வென்ற வள்ளியூா் மாணவிக்கு பாராட்டு

22nd Feb 2020 06:30 AM

ADVERTISEMENT

நா்ஸிங் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தனிநபா் சாம்பியன் பட்டம் வென்ற வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செவிலியா்களின் தாய் என போற்றப்படுகின்ற நைட்டிங்கேல் 200ஆவது பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூ த்துக்குடி மாவட்டங்களிலுள்ள நா்ஸிங் கல்லூரி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலி அண்ணா விளையாட்டு திடலில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் மாணவிகளுக்கான போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று தனிநபா் சாம்பியன் பட்டத்தை வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரி மாணவி சாலினி பெற்றாா்.

மாணவி சாலினியை நேரு நா்ஸிங் கல்லூரி தலைவா் ஹலன் லாரன்ஸ், தாளாளா் டி.டி.என்.லாரன்ஸ், முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம் மற்றும் பேராசிரியைகள், பயிற்சியாளா்கள் பெற்றோா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT