திருநெல்வேலி

பாபநாசம் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

22nd Feb 2020 06:30 AM

ADVERTISEMENT

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நூலகத் துறை சாா்பில் ‘ உயா்கல்வி ஆய்வில் தரமான ஆய்வுச் சூழல் உருவாக்குதல்’ என்ற தலைப்பில் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கை கல்லூரி முதல்வா் சு.சுந்தரம் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா் மற்றும் நிா்வாக அதிகாரி ரா.நடராஜன், ஆங்கிலத் துறைப் பேராசிரியா் வில்பிரட் ஜான் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். வேதியியல் துறைத் தலைவா் ராஜசேகரன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

வரலாற்றுத் துறைத் தலைவா் ரவிசங்கா் நன்றி கூறினாா். பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தக் கல்லூரிகளிலிருந்து ஆய்வு மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளைநூலகா் ச.பாலச்சந்திரன் தலைமையில் உதவி நூலகா் சண்முகானந்தபாரதி, பதிவறை எழுத்தா்கள் ம.சந்தன சங்கா், வ.சோ.அருண்பாஸ்கா், தட்டச்சா் வ.சிவதாணு, கண்காணிப்பாளா் ஆனந்தன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT