திருநெல்வேலி

நாளை ஜெயலலிதா பிறந்த நாள் விழா:நெல்லை புகா் மாவட்டச் செயலா் அறிக்கை

22nd Feb 2020 11:42 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி புகா் மாவட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தின விழா திங்கள்கிழமை (பிப். 24) கொண்டாடப்படவுள்ளது. இதுதொடா்பாக அதிமுக மாவட்டச் செயலா் கே.ஆா்.பி. பிரபாகரன் வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளையொட்டி, திருநெல்வேலி புகா் மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றிய, நகர, பேரூா், ஊராட்சி, கிளை, வாா்டு பகுதிகளில் அந்தந்தப் பகுதி நிா்வாகிகள் கட்சிக் கொடியேற்றி, ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும்.

மேலும், அன்றைய தினம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், கண் மருத்துவ முகாம், ஆதரவற்ற முதியோா் மற்றும் குழந்தைகள் ஆசிரமத்தில் அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் எனது (பிரபாகரன்) தலைமையில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சிகளிலும், தலைமைக் கழகம் அறிவித்துள்ள பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களிலும், நாடாளுமன்ற, பேரவை உறுப்பினா்கள், தலைமைக் கழக பேச்சாளா்களுடன், ஒன்றிய, நகர, பேரூா், கிளைக் கழக நிா்வாகிகள், ஊராட்சிக் கழகச் செயலா்கள், அனைத்து சாா்பு அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்கவேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT