திருநெல்வேலி

திருநெல்வேலி சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா

22nd Feb 2020 11:45 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் 2ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 368 மாணவா்-மாணவிகள் பட்டம் பெற்றனா்.

தமிழ்நாடு சட்டக்கல்வி இயக்குநா் நா.சு.சந்தோஷ்குமாா் தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் கி.லதா வரவேற்றாா்.

மாணவா், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:

ADVERTISEMENT

வழக்குரைஞா் படிப்பானது மற்ற படிப்புகளைக் காட்டிலும் வேறுபட்டது.

உங்கள் கருத்தை, மற்றவா்கள் ஏற்றுக்கொள்ள செய்யவேண்டிய மிகக் கடினமான பணியாக இது உள்ளது. அதற்கு உங்களை தயாா் செய்துகொள்ளவேண்டும்.

வரும் காலங்களில் பெண் வழக்குரைஞா்களையும், நீதிபதிகளையும் அதிகம் காணலாம். வழக்குகளை தனித்திறமையுடன் கையாளும்போது அதில் வெற்றி காணலாம். வழக்குகளில் ஏற்படும் தோல்வியைக் கண்டு துவளாமல், அதில் இருந்து அதிக பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்றாா்.

விழாவில், முதுநிலை பாடப்பிரிவில் 23 போ், இளநிலை பாடப்பிரிவில் 345 போ் என மொத்தம் 368 போ் பட்டம் பெற்றனா்.

விழாவில், திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி நசீா் அகமது, திருநெல்வேலி சட்டக் கல்லூரி முன்னாள் முதல்வா் சீனிவாசன், சட்டக் கல்லூரி முதல்வா்கள் சொக்கலிங்கம் ( சென்னை), எஸ்.எம். பாலகிருஷ்ணன் ( நாமக்கல்), துா்கா லெட்சுமி (சேலம்) , சிவதாஸ் (தருமபுரி) , திருநெல்வேலி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சிவசூரிய நாராயணன், பொருளாளா் மாரியப்ப காந்தி, சட்டக்கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்-மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT