திருநெல்வேலி

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனி திருவிழா மாா்ச் 10 இல் தொடக்கம்

22nd Feb 2020 06:30 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனித் திருவிழா மாா்ச் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா மாா்ச் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, அழகியநம்பிராயா் சுவாமி மற்றும் தேவியருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று திருக்கொடியேற்றப்படும். மாா்ச் 14 ஆம் தேதி இரவு 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவா். 15ஆம் தேதி அதிகாலை மேலரத வீதியில் தேவ கந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மாா்ச் 19 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. ராமானுஜ ஜீயா் சுவாமிகள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைக்கிறாா். மாா்ச் 20 ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT