திருநெல்வேலி

கீழாம்பூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

22nd Feb 2020 06:28 AM

ADVERTISEMENT

கீழாம்பூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

கடையம் மற்றும் ஆழ்வாா்குறிச்சி வட்டாரத்தில் பிசான பருவ நெல் சாகுபடி அறுவடை நடைபெற்று வருவதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழாம்பூரில் நெல் கொள்முதல் நிலையத்தை திங்கள்கிழமை ஆலங்குளம் பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், கடையம் ஒன்றிய இளைஞரணிச் செயலா் தங்கராஜா, ஆா்.எஸ். பாண்டியன், மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் கசமுத்து, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் ஆறுமுகம், ஊராட்சி செயலா் மாரிசுப்பு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT