கடையநல்லூா் அருள்மிகு கரும்பால் மொழி அம்பாள் சமேத கடகாலீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பலவகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்களுடன் தீபாராதனைகள் நடைபெற்றன. முன்னதாக, கும்பபூஜை நடைபெற்றது.
இதில் திரளானோா் பங்கேற்றனா்.
ADVERTISEMENT
ஏற்பாடுகளை உபயதாரா்கள் செய்திருந்தனா். முன்னதாக பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதேபோல, சொக்கம்பட்டி அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத காசிவிஸ்வநாதா் கோயிலிலும் சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.