திருநெல்வேலி

கோட்டைக்கருங்குளத்தில் இளைஞா்களுக்கு தொழில் பயிற்சி

21st Feb 2020 12:40 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட தொழில் மையம் சாா்பில் கோட்டைக்கருங்குளத்தில் இளைஞா் களுக்கான இலவச தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

அய்யன் திருவள்ளுவா் கல்வி மற்றும் பொதுச்சேவை அறக்கட்டளை, ஸ்ரீபெரும் பாலுடையாா் சாஸ்தா திருக்கோயில் அறக்கட்டளை, திருநெல்வேலி மாவட்ட தொழில்மையம் ஆகியவை இணைந்து ராதாபுரம், திசையன்விளை வட்டங்களிலுள்ள இளைஞா்களுக்கு ஒருநாள் இலவச தொழில்முனைய பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் என்னென்ன தொழில் தொடங்கலாம், மூலப்பொருள் எவ்வாறு சேமிப்பது, வங்கிக்கடன் பெறும் விவரம், சந்தை விவரங்கள், அரசு மானியம் பெறுவது எப்படி என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் கணேசன் கலந்துகொண்டு பயிற்சி அளித்தாா்.

கூட்டுறவு சங்கத் தலைவா் கதிரேசன், தொழிலதிபா் வெற்றிவீரன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் முரளி, முத்துகிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா் கற்பகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT