திருநெல்வேலி

மணிமுத்தாறில் இளம்பெண்தூக்கிட்டுத் தற்கொலை

15th Feb 2020 11:29 PM

ADVERTISEMENT

மணிமுத்தாறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மணிமுத்தாறு காவலா் குடியிருப்பைச் சோ்ந்த கணேசன் மகள் சுமதி (27). இவருக்கும் மணிமுத்தாறு பேரூராட்சியில் பணிபுரியும் அதே பகுதியைச் சோ்ந்த வனராஜ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து, 5 மாத பெண் குழந்தை உள்ளது.

தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து சுமதி தன் தந்தையுடன் வசித்து வந்தாராம்.

இந்நிலையில் மனமுடைந்த சுமதி சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT