திருநெல்வேலி

பாளை.சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று மின் தடை

15th Feb 2020 12:21 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (பிப். 15) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (பிப். 15) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகா், ரஹ்மத் நகா், நீதிமன்றப் பகுதி, சாந்திநகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதி, திருச்செந்தூா் சாலை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மகாராஜநகா், தியாகராஜநகா், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகா், பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, பொறியியல் கல்லூரிப் பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, திருவனந்தபுரம் சாலை, முருகன்குறிச்சி, மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT