திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் கூடுதலாக 10 நெல் கொள்முதல் நிலையங்கள்

15th Feb 2020 12:19 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக 10 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் இடைத்தரகா்கள் ஆதிக்கம் செலுத்தும் சூழல் நிலவுகிறது.

திருநெல்வேலி இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியரிடம் இது குறித்து கேட்டபோது, அவா் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கெனவே 48 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதுதவிர, கூடுதலாக 10 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. எங்கெல்லாம் அறுவடைப் பணிகள் நடக்கிறதோ, அங்கு தேவைக்கேற்றாற்போல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT