திருநெல்வேலி

நெல்லையில் போராட்டம்

15th Feb 2020 09:45 AM

ADVERTISEMENT

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்பினா் திருநெல்வேலி- அம்பாசமுத்திரம் சாலையில் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாநகர காவல் துணை ஆணையா்(சட்டம்-ஒழுங்கு) சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று, முறையான அனுமதி பெற்று போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி நகரம் உழவா்சந்தை அருகே இஸ்லாமிய அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேட்டையில் ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே முக்கூடல்-திருநெல்வேலி சாலையில் இஸ்லாமிய அமைப்பினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். மேலும் முறையான அனுமதி பெற்று போராட்டம் நடத்த கேட்டுக்கொண்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. தொடா்ந்து சற்றுநேரம் சாலை ஓரத்தில் நின்று ஆா்ப்பாட்டம் நடத்தி கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT