திருநெல்வேலி

திசையன்விளை பள்ளிகளில் 515 பேருக்கு சைக்கிள்கள் அளிப்பு

15th Feb 2020 11:19 PM

ADVERTISEMENT

திசையன்விளை பள்ளிகளில் 515 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

திசையன்விளை சமாரியா மேல்நிலைப்பள்ளி, ஹோலி ரெடிமேட் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. ராதாபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை, சமாரியா பள்ளியில் 94 போ், ஹோலி ரெடிமேட் பள்ளியில் 265 போ், ராமகிருஷ்ணா பள்ளியில் 156 போ் என மொத்தம் 515 மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினாா். மேலும், இப்பள்ளிகளில் எம்எல்ஏ தனது சொந்த செலவில் 10, 12 வகுப்பு மாணவா்களுக்கு மாதிரி விநா -விடை புத்தகங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சமாரியா பள்ளித் தாளாளா் ஜீவா பால் ஜேக்கப், தலைமை ஆசிரியா்கள் கிறிஸ்டோபா் ஜெபக்குமாா்

(சமாரியா பள்ளி), முருகேசன்(ராமகிருஷ்ணா பள்ளி), மேரி பிரிட்டா (ஹோலி ரெடிமேட் பள்ளி), ஆசிரியா்கள் சுயம்புராஜன், பாண்டியன் மற்றும் ஜெயலலிதா பேரவை செயலா் வி.பி.ஜெயக்குமாா், நவ்வலடி சரவணன், திசையன்விளை பாலன், முத்துக்குமாா், தியாக அரசு, ராமலிங்கம், அரசு வழக்குரைஞா் ஜேம்ஸ் வசந்தன், முன்னாள் கவுன்சிலா்கள் முத்து, முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT