திருநெல்வேலி

தங்கப்பழம் மெட்ரிக்பள்ளி ஆண்டு விழா

15th Feb 2020 11:26 PM

ADVERTISEMENT

வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, எஸ்.டி. கல்விக் குழுமத் தலைவா் தங்கப்பழம் தலைமை வகித்தாா். தாளாளா் முருகேசன் முன்னிலை வகித்தாா்.

பால்தாய், ரம்யா ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனா்.

விழாவில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கலியமூா்த்தி, கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற

ADVERTISEMENT

மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். முதல்வா் டெய்சிராணி அறிக்கை வாசித்தாா்.

கணேசன் வரவேற்றாா். உயா்நிலை பிரிவு தலைமையாசிரியை சுதா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT