திருநெல்வேலி

கால்டுவெல் பெயரில் ஒப்பிலணக்க ஆய்வு இருக்கை: பொதிகைத் தமிழ்ச் சங்கம் வரவேற்பு

15th Feb 2020 12:13 AM

ADVERTISEMENT

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் ரூ.1 கோடி மானியத்தில் ஒப்பிலணக்க ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பொதிகைத் தமிழ்ச் சங்கம் வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ் மொழி மற்றும் தமிழா் பண்பாட்டின் பெருமைகளை நிலை நிறுத்தியும், உலகம் முழுவதும் தமிழ்மொழியை எடுத்துச் செல்லவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளுக்காக நிதியுதவி செய்து, தமிழுக்கு அளப்பரியச் சேவையை செய்து வரும் தமிழக அரசு, தற்போது தமிழறிஞா் பிஷப் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ரூ.1 கோடி மானியத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கால்டுவெல்லுக்கு பெருமை சோ்த்திருக்கும் தமிழக முதல்வா், துணை முதல்வா், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் ஆகியோரை பொதிகைத் தமிழ்ச் சங்கம் பாராட்டி மகிழ்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT