திருநெல்வேலி

கராத்தே போட்டி:அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

15th Feb 2020 11:17 PM

ADVERTISEMENT

கராத்தே போட்டியில் குட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றனா்.

களக்காட்டில் அலி டிராகன் கராத்தே கிளப் சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான டிரடிஷனல் ஹோட்டாகான் தேசிய சாம்பியன்ஷிப் கராத்தேப் போட்டிகள் நடைபெற்றது. இதில், குட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு, 9 ஆம் வகுப்பு மாணவிகள் திவ்விய தா்ஷினி, ஜாய்ஸ் ரீட்டா ஆகியோா் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், மாணவிகள் பெ.அபிநயா, அ.சிவசந்தியா ஆகியோா் 2 ஆவது இடம்பெற்று வெள்ளிப் பதக்கமும்

பெற்றனா். மேலும், இப்பள்ளிக்கு சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்பட்டது.

மாணவிகள், பயிற்றியாளா் ஆகியோருக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சக்திவேல் மாா்த்தாண்டன், பள்ளி வளா்ச்சிக் குழு உறுப்பினா் கோபி மாா்த்தாண்டன், தலைமையாசிரியா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT