திருநெல்வேலி

கடையத்தில் பிப். 17இல் முன்னோடி மனுநீதி முகாம்

15th Feb 2020 11:21 PM

ADVERTISEMENT

கடையத்தில் பிப். 17இல் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.

தென்காசி கோட்டாட்சித் தலைவா் பழனிகுமாா் தலைமையில் தென்காசி வட்டம், கடையம் குறுவட்டத்திற்குள்பட்ட தெற்குக் கடையம் , மேலக்கடையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு பிப். 26இல் (புதன்கிழமை) மனு நீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.

இதற்கான முன்னோடி முகாம் திங்கள்கிழமை ( பிப். 17) நடைபெறுகிறது. இந்த முன்னோடிமுகாமில் மேற்கூறிய வருவாய் கிராம மக்கள் சாலை வசதி, மின் விளக்கு வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், குடிமைப்பொருள், உதவித் தொகை உள்ளிட்ட வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என ஆட்சியா் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT