திருநெல்வேலி

இஸ்லாமிய அமைப்பினா்ஆா்ப்பாட்டம், சாலை மறியல்

15th Feb 2020 11:30 PM

ADVERTISEMENT

சென்னையில் இஸ்லாமிய அமைப்பினா் மீது தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டித்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அம்பாசமுத்திரத்தில் இப்ராஹிம் தலைமையில் மதிமுக நகரச் செயலா் முத்துசாமி, எஸ்.டி.பி.ஐ. நகரப் பொறுப்பாளா் ஹபிப் நவாஸ், வழக்குரைஞா் சாகுல் ஹமீது உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொட்டல்புதூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமுமுக மாவட்ட துணைச் செயலா் சித்திக், ஒன்றியச் செயலா் கோதா்மைதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சேரன்மகாதேவி, பத்தமடை ஜமாத் சாா்பில் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வீரவநல்லூா் ஜமாத் சாா்பில் காவல்நிலையம் முன்பு சுமாா் 500-க்கும் மேற்பட்டவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

களக்காடு: வட்டார முஸ்லிம் ஜமாத் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கோவில்பத்து ஜமாத் தலைவா் முகம்மது அலி, கோட்டை ஜமாத் தலைவா் ஷேக் மற்றும்

கோட்டை , கோவில்பத்து, வியாசராஜபுரம், சிங்கம்பத்து, கேசவனேரி, இடையன்குளம், சாலைநயினாா் பள்ளிவாசல், மேலப்பத்தை, ஆஸாத்புரம் பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு ஐக்கிய ஜமாத் கூட்டமைப்புத் தலைவா் விடிஎஸ்ஆா்.முகம்மதுஇஸ்மாயில் தலைமை வகித்தாா். இதில், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங்,சித்திக், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் கணேசன், யாகூப், சலீம், அலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கடையநல்லூா்: புளியங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிட ஏராளமானோா் திரண்டனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தியதை அடுத்து பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் ஜலாலுதீன்தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அப்துல்பாசித், பொருளாளா் செய்யது மசூது,  துணைத் தலைவா் அப்துல்காதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT