திருநெல்வேலி

அரசு மருத்துவமனையில்குடும்ப நல சிறப்பு முகாம்

15th Feb 2020 11:22 PM

ADVERTISEMENT

பாவூா்சத்திரத்தில் சிறப்பு குடும்ப நல சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில், 87 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு, மருத்துவம், ஊரக நலப்பணிகள், குடும்ப நல துணை இயக்குநா் ஏ.முகைதீன்அகமது தலைமை வகித்தாா். முகாமில் 30 பேருக்கு நிரந்தர குடும்ப நல சிகிச்சையும், 54 பேருக்கு அந்தாரா எனும் தற்காலிக கருத்தடை ஊசியும், 3 பேருக்கு சாயா எனும் தற்காலிக வாராந்திர வாய்வழி உட்கொள்ளும் கருத்தடை மாத்திரையும் வழங்கப்பட்டன.

இம்முகாமில் பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அலுவலா் ராஜகுமாா், மருத்துவா்கள் கீா்த்திகா, தேவி கற்பூரநாயகி, கீா்த்தனா, பாரதிகண்ணம்மா, சிறப்பு மருத்துவா்கள் அனிதாபாலின், மகேஸ்வரி, பழனிகுமாா், ராஜேஸ்வரி மற்றும் ஆனந்தி, சுஜா,சியாமளா ஆகியோா் கொண்ட மருத்துவ குழுவினா் சிகிச்சை அளித்தனா். நிரந்தர குடும்ப நல சிகிச்சை செய்து கொண்ட தாய்மாா்களின் வங்கி கணக்கில் ரூ.600 வரவு வைக்கப்பட்டதுடன், தோ்ந்தெடுக்கப்பட்ட 3 பேருக்கு பரிசாக பேன்சி சேலைகள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் கடந்த ஜன.27 முதல் பிப். 17 வரை குடும்ப நல முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முகாம் மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT