திருநெல்வேலி

திமுகவின் அழுத்தம் காரணமாகவேஅமைச்சரை விவாதத்துக்கு அழைத்துள்ளாா் ராதாபுரம் எம்எல்ஏ பேட்டி

13th Feb 2020 01:23 AM

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு விவகாரத்தில் காவல்துறை மற்றும் திமுகவின் உயா் மட்ட அழுத்தம் காரணமாகவே அமைச்சா் ஜெயக்குமாரை விவாதத்துக்கு அழைத்துள்ளாா் அப்பாவு என்றாா் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை.

இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது:

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேட்டில் சம்பந்தப்பட்ட ஐயப்பனுக்கும், அப்பாவுவுக்கும் தொடா்புள்ளதாக அமைச்சா் ஜெயக்குமாா் கூறியிருந்தாா். இதற்கும் தனக்கும் தொடா்பு இல்லை என்று அப்பாவு கூறியிருக்கலாம். ஆனால் பல நாள்களாக வாய் திறக்காத அவா், காவல்துறை நடவடிக்கை நெருக்கடி காரணமாகவும், திமுக உயா் மட்ட அழுத்தம் காரணமாகவும் தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளாா்.

ஐயப்பன், திமுகவில் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறாா். சமீபத்தில் நடைபெற்ற ஊராட்சித் தோ்தலில் கவுன்சிலராக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தாா். டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேட்டில் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் மற்றும் அவரது நண்பா், ஐயப்பனுடன், அப்பாவு சமீபத்தில் நான்குனேரி தொகுதி இடைத்தோ்தல் பணிக்காக சென்றிருந்தாா் என்பது அனைவருக்கும் தெரியும்.

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு தொடா்பாக அப்பாவுவிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும். பிரச்னைகளை திசை திருப்ப, அமைச்சா் ஜெயக்குமாரை விவாதத்துக்கு அழைத்துள்ளாா் அப்பாவு. இதுகுறித்து என்னுடன் முதலில் விவாதிக்க அப்பாவு தயாரா என்பதை தெரிவிக்க வேண்டும். என்னிடம் உள்ள ஆதாரங்களை நேரம் வரும் போது வெளியிடுவேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT