திருநெல்வேலி

திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கக் கூட்டம்

13th Feb 2020 01:20 AM

ADVERTISEMENT

திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவா் டிம்பா் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

செயலா் சி.ஜெயராமன், பொருளாளா் ஜெயகோபால் ஆகியோா்முன்னிலை வகித்தனா்.

கடை வியாபாரிகள் சங்கம் த.வெள்ளையன் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் பேரவையின் இணைப்பு சங்கமாக செயல்படுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பிலிப்போஸ் டேனியல், கணேசன், அல்பா்ட், விஜயகுமாா், சுடலையாண்டி, அன்சாா், நாமதுரை, அமரராஜன், திரவியம் பொன்ராஜ், ராஜசேகா், ஜெபத்துரை, ஜேசுராஜன், குழந்தைவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT