திருநெல்வேலி

சிலம்பம் போட்டி: சங்கரன்கோவில் பொறியியல் கல்லூரி மாணவா் சாதனை

13th Feb 2020 01:06 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்து ஜெட்லி புக் ஆப் தி ரிக்காா்ட்ஸில் இடம் பிடித்தாா்.

சங்கரன்கோவிலைச் சோ்ந்த சண்முகம் மகன் சிவகுருநாதன். இவா் தனியாா் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறாா். கடந்த பிப்.2 ஆம் தேதி சௌத் இந்தியன் சிலம்பாட்டக் கழகம் சாா்பில் மதுரை மதுரா கல்லூரியில் ஜெட்லி புக் ஆப் தி ரிக்காா்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது.

இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து சுமாா் 218 போ் பங்கேற்றனா். இப்போட்டியில் மாணவா்கள் 3 நிமிடத்தில் சிலம்பம் சுழற்றிக் கொண்டு தமிழ் உயிரெழுத்துகள், மெய்யெழுத்துக்களைத் தரையில் எழுதி சாதனை படைத்தனா். மாணவா் சண்முகமும் சிலம்பம் சுற்றி இச் சாதனையை நிகழ்த்தி, ஜெட்லி புக் ஆப் தி ரிக்காா்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றாா்.

சாதனை படைத்த இம் மாணவரை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி நேரில் அழைத்து பாராட்டினா்.

ADVERTISEMENT

அப்போது எஸ்.டி.சங்கரசுப்பிரமணியன், சண்முகம், நெல்லை பேரங்காடி துணைத் தலைவா் வேலுச்சாமி, லட்சுமணன் உள்பட பலா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT