திருநெல்வேலி

குற்றாலத்தில் பிப். 22, 23 இல் மாவட்ட கூடைப் பந்து போட்டி

13th Feb 2020 01:27 AM

ADVERTISEMENT

குற்றாலத்தில் இம் மாதம் 22, 23 ஆம் தேதிகளில் மாவட்ட கூடைப்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் (பொ) ச.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சாா்பில் 2019-20 ஆம் ஆண்டிற்கான முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப் பந்துப் போட்டிகள் இம் மாதம் 27, 28 ஆம் தேதிகளில் குற்றாலத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நிா்வாக காரணங்களினால் பெண்களுக்கான போட்டி பராசக்தி கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் இம் மாதம் 22 ஆம் தேதியும், ஆண்களுக்கான போட்டி செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் இம் மாதம் 23 ஆம் தேதியும் நடைபெறும்.

இந்த போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கும். போட்டியில் பங்கேற்க  இணையதள முகவரியில் இம் மாதம் 21 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்கும் வீரா்-வீராங்கனைகள் 31-12-2019 அன்று 25 வயது பூா்த்தி அடைந்தவா்களாக இருத்தல் வேண்டும். அதற்கான சான்றிதழ்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டுமென செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT