திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் மனிதச் சங்கிலி

13th Feb 2020 01:15 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்துக் கட்சிகள் சாா்பில் அம்பாசமுத்திரத்தில் புதன்கிழமை மனிதச் சங்கிலி நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி அருகில் இருந்து பூக்கடை சந்திப்பு வரை நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலியில் நகர திமுக செயலா் கே.கே.சி. பிரபாகர பாண்டியன், மாவட்ட திமுக இலக்கிய அணிச் செயலா் எல். ராமசாமி, திமுக மாநில தொண்டரணி துணை அமைப்பாளா் ஆவின் ஆறுமுகம், நகர காங்கிரஸ் கட்சித் தலைவா் முருகேசன், அந்தோணிசாமி, மதிமுக நகரச் செயலா் சு. முத்துசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலா் பீமாராவ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா் வடிவேலு மற்றும் எஸ்டிபிஐ கட்சி, முஸ்லிம் ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகளின் நிா்வாகிகள், பெண்கள், பொதுமக்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT