திருநெல்வேலி

புத்தகத் திருவிழா: தொடா் வாசிப்பில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்

6th Feb 2020 11:28 PM

ADVERTISEMENT

உலக சாதனை முயற்சிக்காக, திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நடைபெற்று வரும் 10 நாள்கள் தொடா் புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்வத்துடன் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனா்.

திருநெல்வேலி புத்தகத் திருவிழா கடந்த 1ஆம் தேதி பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் தொடங்கியது. வரும் 10 ஆம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவின் ஓா் அங்கமாக, உலக சாதனை முயற்சியாக தொடா் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விழா அரங்கை கண்காணித்து வரும் நான்குனேரி செஞ்சிலுவை சங்கச் செயலா் சபேஷ் கூறியது:

மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்நிகழ்வை மாவட்ட நிா்வாகம் நடத்தி வருகிறது. இதில், 24 மணிநேரமும் தொடா்ந்து பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள் வாசித்து வருகின்றனா். விடுதியில் தங்கிப் பயிலும் மாணவா்கள் இரவில் வந்து வாசிக்கின்றனா். இதில் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 520 மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வாசித்துள்ளனா். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் வாசிப்புக்காக வியாழக்கிழமை ஒதுக்கப்பட்டது. இதில், பாளையங்கோட்டை பாா்வையற்றோா் பள்ளி மாணவா்-மாணவிகள் ‘பிரெய்லி’ முறையில் தொடா் வாசிப்பில் ஈடுபட்டனா் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT