செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும், பள்ளி மேலாண்மை வளா்ச்சிக் குழு தலைவருமான சட்டநாதன் தலைமை வகித்து, மடிக்கணினி, சைக்கிள்கள் ஆகியவற்றை வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சிக்கு, பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் அமுதா முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியை ஆசிரியா் கிறிஸ்டோபா் தொகுத்து வழங்கினாா்.
தலைமையாசிரியா் (பொறுப்பு) லதா வரவேற்றாா். ஆசிரியா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.