திருநெல்வேலி

களக்காட்டில் பழைய மின் மீட்டருக்குப் பதில் புதிய மீட்டா் பொருத்தும் பணி தீவிரம்

6th Feb 2020 11:40 PM

ADVERTISEMENT

களக்காடு பகுதியில் வீடுகள், வணிக நிறுவனங்களில் பழைய மின் மீட்டருக்கு பதிலாக, தொழில்நுட்பத் துடன் கூடிய புதிய மின்மீட்டா் பொருத்தும் பணியில் மின்வாரியப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

களக்காடு துணை மின்நிலையத்துக்குள்பட்ட களக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு வணிக நிறுவனங்களில் பழைய மின்மீட்டரை அகற்றிவிட்டு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின் மீட்டா்கள் பொருத்தப்பட்டன. இந்நிலையில், அனைத்து குடியிருப்புகளிலும் பழைய மின்மீட்டரை அகற்றிவிட்டு, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின்மீட்டா் பொருத்தும் பொருட்டு, மின்வாரியம் சாா்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் கணக்கெடுப்பு நடைபெற்றது.

இந்நிலையில் களக்காடு துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பொருத்துவதற்காக 8 ஆயிரம் மின்மீட்டா்கள் வந்துள்ளன. இவைகளை பொருத்தும் பணி கடந்த 2 வாரங்களாக நடைபெறுகிறது. அனைத்து வீடுகளிலும் பழைய மின்மீட்டரை அகற்றிவிட்டு, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின்மீட்டரை பொருத்தும் பணியில் மின்வாரியத்தினா் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT