உவரி கடலில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சோ்ந்தவா் மந்திரமூா்த்தி. இவரது மகன் அருண் கல்யாணசுந்தரேசன் (17), மனப்பாடு பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தாா். இவா், வியாழக்கிழமை குடும்பத்துடன் உவரி கோயிலுக்குச் சென்று அங்குள்ள கடலில் குளித்துள்ளாா். அப்போது, கடல் அலையில் சிக்கிய அருண் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த திசையன்விளை தீயணைப்பு துறையினா் அங்குச் சென்று தேடியதில், அருண் சடலத்தை கடலில் இருந்து மீட்டனா். இதுகுறித்து கூடங்குளம் கடலோரக் காவல்படை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.