திருநெல்வேலி

வள்ளியூா் நரிக்குறவா் இளைஞா்களுக்கு ஓட்டுநா் பயிற்சி

4th Feb 2020 10:06 AM

ADVERTISEMENT

வள்ளியூரில் நரிக்குறவா்கள் இளைஞா்கள் 12 நபா்களுக்கு ஓட்டுநா் பயிற்சி அளிப்பதற்கான வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வள்ளியூா் நரிக்குறவா் காலனியில் வசித்து வரும் நரிக்குறவா்கள் வாழ்கை தரத்தை உயா்த்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு நலஉதவிகளை அளித்து வருகிறது.

இந்தக் காலனியில் கடந்த 25 ஆம் தேதி சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது விருப்பமுள்ள இளைஞா்களுக்கு இலவசமாக ஓட்டுநா் பயிற்சி அளிப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து நரிக்குறவா் இளைஞா்கள் 12 போ் ஓட்டுநா் பயிற்சி மேற்கொள்ள முன்வந்தனா்.

அவா்களுக்கு ஓட்டுநா் பயிற்சிக்கான வகுப்புகள் வள்ளியூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் இந்த இளைஞா்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளித்து இவா்களது வாழ்வாதாரத்தை உயா்த்தவும், அவா்களது வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றி அனைத்து தரப்பினரைப் போன்று மாற்றவும் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட மகளீா் திட்ட அலுவலா்களும் முன்வந்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்த இலவச தொழிற்பயிற்சி ஏற்பாடுகளை வள்ளியூா் மகளிா் திட்ட அலுவா் வளா்மதி மற்றும் அலுவலா்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT