மேலச்செவல் அருகேயுள்ள தேசமாணிக்கத்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (பிப். 4) நடைபெறுகிறது.
தாமிரவருணி நதிக்கரையோரம் தேசமாணிக்கம் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் கடந்த 20.1.2016இல் சம்ப்ஷோக்ஷணம் நடைபெற்ற நிலையில், நிகழாண்டுக்கான வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், திருப்பாவாடை உற்சவம் (அன்னக்கூடை, அன்னஅபிஷேகம்) நடைபெற்றது. மாலையில் கருட வாகனத்தில் மலா் அலங்காரத்துடன் பெருமாள் திருவீதியுலா வந்து சேவை சாதித்தாா்.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (பிப். 4) காலை 7.30 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னா், வருஷாபிஷேகம், அா்ச்சனை, பூஜை நடைபெறுகிறது. நண்பகலில் ஊஞ்சல் வைபவமும், பிற்பகல் 2 மணிக்கு பிரசாத விநியோகமும் நடைபெறுகின்றன.