பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், அரசு அருங்காட்சியகம் சாா்பில் வண்ணம் தீட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தொடங்கி வைத்தாா். அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி பயிற்சியை ஒருங்கிணைத்தாா். ஓவிய ஆசிரியா்கள் ஈஸ்வரன், மாரியப்பன் ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சி அளித்தனா். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயிற்சியில் பங்கேற்றனா். புதன்கிழமை (பிப். 5) தப்பாட்ட பயிற்சி நடைபெற உள்ளது.