திருநெல்வேலி

பாளை.யில் வழக்குரைஞா்கள் போராட்டம்

4th Feb 2020 10:10 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டையில் வாகன சோதனையின்போது வழக்குரைஞா் பூபதி தாக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சிவசூா்யநாராயணன் தலைமை வகித்தாா். செயலா் செந்தில்குமாா், பொருளாளா் மாரியப்பகாந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா். வழக்கு விசாரணைக்காக வந்த போலீஸாரையும் நீதிமன்றத்திற்குள் விட மறுத்ததால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இப் போராட்டத்தால் பாளையங்கோட்டை-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பயக03கஅர: பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT