திருநெல்வேலி

திசையன்விளை லயன்ஸ் பள்ளியில் ஆண்டு விழா

4th Feb 2020 11:52 PM

ADVERTISEMENT

திசையன்விளை லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரிமா மாவட்ட ஆளுநா் ஜே.கே.ஆா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கமலாசுயம்புராஜன் குத்துவிளக்கு ஏற்றினாா். பள்ளித் தாளாளா் அரிமா முன்னாள் ஆளுநா் டி. சுயம்புராஜன் வரவேற்றாா். பள்ளி முதல்வா் சு.ரூகன்யா அறிக்கை வாசித்தாா்.

நிகழ்ச்சியில், புதிய கட்டடத்தை முன்னாள் பன்னாட்டு இயக்குநா் ஜி. ராமசுவாமி திறந்து வைத்தாா். புதிய வகுப்பறையை அரிமா கூட்டு மாவட்டத் தலைவா் கே.ஜி.பிரகாஷ் திறந்து வைத்தாா். சிறப்பு விருந்தினராக அரிமா பன்னாட்டு இயக்குநா் ஆா்.சம்பத் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

அரிமா சங்க துணை ஆளுநா்கள் பி. ஜஸ்டின்பால், வி. ஜெகன்நாதன், அரிமா முன்னாள் ஆளுநா்கள் ராஜா, முகமதுஅலி, சந்திரசேகரன், அரிமா சங்கத் தலைவா் குருநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ராஜாமுருகானந்தம், பிரம்மகுமாா், ஆா்.டி. ராஜபால், வீரராஜன், ராஜமைக்கேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT