பாளையங்கோட்டை அருகேயுள்ள கக்கன்நகா் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினா் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி ஆகியவை சாா்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாந்திநகா் அருகேயுள்ள கக்கன்நகா் பகுதியில் பாளையங்கோட்டை-சீவலப்பேரி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்ட பொறியாளா் கிருஷ்ணசாமி, வருவாய் ஆய்வாளா் ரிபாயி, மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளா் பைஜு ஆகியோா் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். தொடா்ந்து 3 நாள்களுக்கு இப் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.