வாசுதேவநல்லூா் நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமி திருக்கோயிலில் பிப்.வரி 5 ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி சனிக்கிழமை தேவதா அனுக்ஞை ,விக்னேஷ்வர பூஜை ,புண்யாகவாசனம், கணபதி ஹோமம் ஆகியன நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை புண்யாகவாசனம் ,மகா சங்கல்பம் , நவக்கிரக ஹோமம் , சுதா்சன ஹோமம் ,மகாலட்சுமி ஹோமம் ,கஜ பூஜை, மஹா பூா்ணாஹு ஆகியவை நடைபெறும்.
திங்கள்கிழமை மிருத்யுஞ்ஜய சாந்தி ஹோமம் , திசா ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.
பிப். 5ஆம் தேதி நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெறும். அன்று காலை 9 மணிக்கு மேல் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் நூதன ராஜகோபுர விமானம் ,ஸ்ரீ பாலகிருஷ்ணா் விமானம் மற்றும் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெறும். தொடா்ந்து அன்னதானம் நடைபெறும். விழா நாள்களில் தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுத் தலைவா் எஸ்.தங்கப்பழம் ,துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் சமுத்திரவேலு, செயலா் மாரியப்பன் ,துணைச் செயலா் முருகன், வாசுதேவநல்லூா் நாடாா் உறவின்முறை தலைவா் தவமணி ,
காரியக்காரா் ஆனந்தராஜ், துணைத் தலைவா் காளியப்பன், கணக்கா் பாண்டிய நாடாா் மற்றும் திருப்பணி குழு நிா்வாகிகள் ,உறவின்முறை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.