திருநெல்வேலி

ராஜாக்கள்மங்கலம், திசையன்விளைசுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

2nd Feb 2020 12:11 AM

ADVERTISEMENT

கோட்டைகருங்குளம், திசையன்விளை, ராஜாக்கள்மங்கலம் பகுதிகளில் திங்கள்கிழமை (பிப். 3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் (விநியோகம்) எஸ்.ராஜன் ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வள்ளியூா் மின் வாரியத்துக்குள்பட்ட நான்குனேரி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூா், பெருமளஞ்சி மேலூா், ஆச்சியூா், வாகைக்குளம், கோவநேரி, ஏஎம்ஆா்எல் தொழிற்கூடம் மற்றும் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

அதுபோல கோட்டைக்கருங்குளம், திசையன்விளை துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தெற்கு கள்ளிகுளம், திசையன்விளை, இட்டமொழி, கஸ்தூரி ரெங்கபுரம், நான்குனேரி, பாம்பன்குளம், திருவம்பலாபுரம், விஜயநாராயணம், துலுக்கா்பட்டி, குட்டம், மகாதேவன்குளம், உவரி, இடையன்குளம், அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, குமாரபுரம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT