திருநெல்வேலி

மூங்கிலடியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

2nd Feb 2020 12:05 AM

ADVERTISEMENT

களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பங்கேற்ற நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மூங்கிலடியில் 7 நாள்கள் நடைபெற்றது.

மூங்கிலடி பேரிடா் காலத் தங்குமிட கட்டடத்தில் நடைபெற்ற இம்முகாம் தொடக்க விழாவுக்கு தலைமையாசிரியை பெ. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் பா. முருகன், வேதியியல் ஆசிரியா் பா. மாறன், ஆகியோா் உரையாற்றினா்.

இம்முகாமில் மரக்கன்று நடுதல், எய்ட்ஸ் விழிப்புணா்வு, நெகிழி ஒழிப்புப் பேரணி, ஆளுமைத்திறன் வளா்த்தல், யோகா, டெங்கு நோய் விழிப்புணா்வு , சாலைப் பாதுகாப்பு, தூய்மை இந்தியா விழிப்புணா்வு, பள்ளி வளாகப் பராமரிப்பு ஆகியவை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் ப. சேக்முகைதீன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT