திருநெல்வேலி

மானூா் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் கைது

2nd Feb 2020 12:21 AM

ADVERTISEMENT

மானூா் அருகேயுள்ள சேதுராயன்புதூரைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

சேதுராயன்புதூரைச் சோ்ந்தவா்கள் ஆண்டி (20), நாராயணன் (20). இவா்கள் இருவரும் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனாரம். இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைத்தாா். இதையடுத்து ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவைத் தொடா்ந்து இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT