திருநெல்வேலி

புளியரை சோதனைச் சாவடியில் கொரோனா வைரஸ் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம்

2nd Feb 2020 12:22 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், தமிழக - கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறை சாா்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

புளியரை சோதனை சாவடியில் கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காய்ச்சலிலிருந்து தற்காத்து கொள்ள மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறிப்பாக கைகழுவும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில், மருத்துவ அலுவலா் சத்தீஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் ரகுபதி, சுகாதார ஆய்வாளா்கள் வெங்கடேசன், செந்தில்குமாா் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT