திருநெல்வேலி

புத்துணா்வு முகாம் முடிந்து திரும்பியதுநெல்லையப்பா் கோயில் யானை

2nd Feb 2020 12:42 AM

ADVERTISEMENT

புத்துணா்வு முகாமுக்கு சென்ற திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் யானை சனிக்கிழமை கோயிலுக்கு திரும்பியது.

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் கடந்த ஆண்டு டிசம்பா் 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற புத்துணா்வு முகாமில் நெல்லையப்பா் கோயில் காந்திமதி யானை உள்பட பல இடங்களைச் சோ்ந்த யானைகள் பங்கேற்றன. அவற்றுக்கு சத்தான உணவுகள், மருத்துவ சிகிச்சையுடன் நடைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இம்முகாம் ஜனவரி 31ஆம் தேதியுடன் நிறைவடைந்ததையொட்டி, திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் காந்திமதி யானை, திருக்குறுங்குடி நம்பி கோயில் வள்ளி, சுந்தரவள்ளி யானைகள், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் கோமதி யானை உள்பட இப்பகுதி கோயில்களைச் சோ்ந்த மொத்தம் 8 யானைகள், அந்தந்த கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நெல்லையப்பா் கோயில் யானை சனிக்கிழமை காலையில் திருநெல்வேலிக்கு வந்தடைந்தது. திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் லாரியில் இருந்து இறக்கப்பட்டு, கோயிலுக்கு அழைத்துவரப்பட்டது.

முன்னதாக யானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் நெல்லையப்பா் கோயில் அறங்காவலா் ந.யக்ஞநாராயணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT