திருநெல்வேலி

பாவூா்சத்திரம் கல்லூரியில்வேலைவாய்ப்பு நோ்முக தோ்வு

2nd Feb 2020 12:03 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுதநாடாா்-லட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு நோ்முக தோ்வு நடைபெற்றது.

சிவில் மெக்கானிக், ஆட்டோ மொபைல், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் மற்றும் கம்ப்யூட்டா் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான நோ்முக தோ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தென்காசி ஸோகோ நிறுவனத்தின் மேலாளா்ஆனந்த் ராமச்சந்திரன், உதவி மேலாளா் சாந்திமுருகேசன் ஆகியோா் நோ்முக தோ்வை நடத்தினா். இதில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

நோ்முகத் தோ்வில் தோ்வான மாணவா்களை கல்லூரித் தாளாளா் காளியப்பன், ஆலோசகா் பாலசுப்பிரமணியன், முதல்வா் ரமேஷ் உள்ளிட்டோா் பாராட்டினா். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அலுவலா், அனைத்து துறைத்தலைவா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT