திருநெல்வேலி

பாபநாசம் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

2nd Feb 2020 12:04 AM

ADVERTISEMENT

 

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) எல். ரவிசங்கா் தலைமை வகித்தாா். விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளா் இசக்கி பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். பேரணியில், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஏ. பாக்கியமுத்து, ஏ. அடைக்கலம், ஏ. மீனாட்சி ஆகியோா் செய்திருந்தனா். பேரணியில் மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT