திருநெல்வேலி

திசையன்விளையில்இலவச கண்சிகிச்சை முகாம்

2nd Feb 2020 12:11 AM

ADVERTISEMENT

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக திசையன்விளை கிளை பணிமனை மற்றும் அகா்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம் திசையன்விளை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

முகாமை பணிமனை கிளை மேலாளா் ரமேஷ்பாபு தொடங்கிவைத்தாா். அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கண் பரிசோதனை மேற்கொண்டனா். இதில், போக்குவரத்து பணியாளா்கள் உச்சிமாகாளி, நாட்டரசன், திசையன்விளை பயணிகள் நலச் சங்கச் செயலா் பிரைட் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT